உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காவல் நிலையத்தை பா.ஜ.,வினர் முற்றுகை

 காவல் நிலையத்தை பா.ஜ.,வினர் முற்றுகை

செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், நா ரவாரிக்குப்பம் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இதில், எட்டாவது வார்டு கவுன்சிலரான தி.மு.க.,வைச் சேர்ந்த கார்த்திக் கோடீஸ்வரன் உள்ளார். இந்த வார்டுக்கு உட்பட்ட வடகரை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில், எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பூர்த்தி செய்யும் பணிகளை, கார்த்திக் கோடீஸ்வரன் பார்வையிட்டார். அப்போது, பா.ஜ., நிர்வாகி 'சென்னை' சிவா, தன் கட்சியினருடன் அங்கு வந்து, எஸ்.ஐ.ஆர்., பணிகள் குறித்து ஓட்டு ச்சாவடி நிலை அலுவலர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் கோடீஸ்வரன், பா.ஜ., நிர்வாகி சென்னை சிவா மற்றும் கட்சியினரை அவதுாறாக பேசியதாக தெரிகிறது. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்களை அவதுாறாக பேசிய, தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் கோடீஸ்வரனை கைது செய்யக் கோரி, செங்குன்றம் காவல் நிலையத்தை நேற்று இரவு, 50க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர் முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை, சமரசம் செய்து அனுப்பி னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை