மேலும் செய்திகள்
ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
26-Mar-2025
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான விரைவு ரயில்களும், மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் இங்கு, நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பார்சல் அலுவலகத்தின் இ - மெயில் முகவரிக்கு, நேற்று பகல் 12:30 மணியளவில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். உடனடியாக, ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், மோப்ப நாய்களுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அனைத்து இடங்களில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, ரயில் பெட்டிகள், நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு பகுதிகளில், தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.பயணியரின் உடைமைகளிலும் சோதனை நடத்தப்பட்டதால், பயணியரிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் முடிவில், இ - மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இ - மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, காவல் துறை கட்டுப்பாடு அறைக்கு நேற்று, 'பேக்ஸ்' வாயிலாக மர்ம நபரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது.உடனடியாக, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு விரைந்து, பொதுமக்கள், அதிகாரிகளை வெளியேற்றி சோதனை மேற்கொண்டனர்.அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Mar-2025