உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புத்தகக்காட்சி -நுால் அறிமுகம்

புத்தகக்காட்சி -நுால் அறிமுகம்

ஓர்மைகள் மறக்குமோஆசிரியர்: அரசு அமல்ராஜ்வெளியீடு: காலச்சுவடுபக்கம்: 239, விலை: ரூ.290-மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலையை புவியியல், நிலவியல், சூழலியல் ரீதியில் ஆராயும் நுால். சோலைக்காடு வளமானதையும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றியும் அலசுகிறது. அந்நிலத்தின் மாறி மாறி அமைந்துள்ள அதிகாரம் பற்றியும் பேசும் நுால்.********விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள்ஆசிரியர்: வி.என்.சாமிவெளியீடு: வி.என்.சாமி, மதுரை.பக்கம்: 720, விலை: ரூ.600-இந்திய விடுதலைப் போருக்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்கள் குறித்த விபரங்களை, 133 தலைப்புகளில் விரிவாகத் தொகுத்துள்ளார் ஆசிரியர். தியாகிகளுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு பாலமாகவும் இருந்த பத்திரிகையாளர்களின் ஆவணம் இது.*******கஸ்துார்பா வி.எஸ்.காந்திஆசிரியர்: பரகூர் ராமச்சந்திரப்பாதமிழாக்கம்: மதுமிதா, மலர்விழிவெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், சென்னை.பக்கம்: 200, விலை: ரூ.250-கன்னடத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நுாலில், காந்தியின் வாழ்வில், அவர் மனைவி கஸ்துாரி பாய் ஆற்றிய பங்களிப்புகள் புனையப்பட்டுள்ளன. வீட்டிலும், நாட்டிலும் தன் கணவரின் எண்ணங்களை அறிந்து, அதற்கு உதவிய கஸ்துாரி பாயை கச்சிதமாக்கிய நுால்.*******சூரியக் குடும்பம்ஆசிரியர்: பா.ஸ்ரீகுமார்வெளியீடு: சுட்டி மீடியா, சென்னை.பக்கம்: 46, விலை: ரூ.120-குழந்தைகளுக்கு வானியலை புரிய வைக்கும் வகையில் மலர்ந்துள்ள நுால். சூரியக் குடும்பத்தை பற்றி எளிமையாக எடுத்துரைக்கிறது. சூரிய குடும்பத்தை விளக்கி, அதில் உள்ள ஒவ்வொரு கோள் பற்றியும் விளக்குகிறது. சிறுவர்களுக்கு ஏற்ற எளிய நுால்.********அதல பாதாளம் முதல் ஆகாயம் வரைஆசிரியர்: கஸ்துாரி வெங்கடேசன், பெ.சசிக்குமார்வெளியீடு: எழிலினி பதிப்பகம், சென்னை.பக்கம்: 368, விலை: ரூ.600-எளிய குடும்பத்தில் பிறந்தாலும், உழைப்பாலும் கல்வியாலும் ஜப்பானின் கடல் உயிரியியல் துறையில் பணியேற்று சாதனைகள் புரிந்தவர்; படிப்படியாக உயர்ந்து நாசாவில் முதுநிலை விஞ்ஞானியாக உயர்ந்தவர்; அவர் தாண்டிய தடைகளை விளக்கும் தன்னம்பிக்கை சுயசரிதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை