உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெற்றோரின் மண்டை உடைத்த சிறுவன் கைது

பெற்றோரின் மண்டை உடைத்த சிறுவன் கைது

எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் ரவி, 36; ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி கலைவாணி, 35. மூன்று மகன்கள் உள்ளனர்.ரவியின் 17 வயதான மூத்த மகன், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். ரவி மகனை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன், தாய் மற்றும் தந்தையை கல் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினார்.தலையில் படுகாயமடைந்த இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், கலைவாணிக்கு தலையில் 9 தையல்களும்; ரவிக்கு தலையில் 4 தையல்களும் போடப்பட்டுள்ளன.விசாரித்த போலீசார், சிறுவனை கைது செய்து சிறார் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை