உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகை திருடிய சிறுவன் கைது

நகை திருடிய சிறுவன் கைது

திரு.வி.க.நகர், பெரம்பூர், ஜானகிராமன் நகரில் மாடியில் உள்ள வாடகை வீட்டில் வசிப்பவர் அமீனாபானு,43. கடந்த 22ம் தேதி வீட்டின் பீரோவில் 6 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இது குறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்புக்கரசி விசாரித்தார். தெருவில் உள்ள 'சிசிடிவி', கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, நகைகளை திருடிச் சென்றது, பெரம்பூரை சேர்ந்த 17 வயது பழைய இளம் குற்றவாளி என்பது தெரியவந்தது.அவரது வீட்டில் சென்று சோதனையிட்ட போது, திருடு போன நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. திருடனை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த சிறுவன் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ