உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 6வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் பலி

6வது மாடியில் இருந்து விழுந்த சிறுவன் பலி

சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலை 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் திலீப், 38. இவரது மனைவி சுவாதி. தம்பதிக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.வேலுாரில் இருந்து சுவாதியின் பெற்றோர், நேற்று கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்திருந்தனர். அவர்களை பார்க்க சுவாதி மகன், மகளை அழைத்துச் சென்றார். அங்கு பெற்றோரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது.என்னவென்று பார்த்தபோது, அவரது நான்கரை வயது மகன் துருவன், ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தான்.பதறியடித்து அனைவரும் அங்கு சென்று, சிறுவனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை