உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இட்லி தட்டில் சிக்கிய சிறுவனின் விரல்

இட்லி தட்டில் சிக்கிய சிறுவனின் விரல்

ஆவடி: இட்லி தட்டின் துவாரத்தில் சிக்கிய சிறுவனின் விரலை, தீயணைப்பு வீரர்கள் போராடி பத்திரமாக மீட்டனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர் ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ், 35. அவரது மனைவி ஸ்ரீ மெர்ளானி, 30. இவர்களது மகன் மாஹிர், 5. நேற்று காலை மெர்ளானி, சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, மாஹிர் இட்லி தட்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளான். திடீரென ஸ்டீல் இட்லி தட்டின் துளையில், சிறுவனின் ஆள்காட்டி விரல் சிக்கி கொண்டது. இதனால், பயத்தாலும் வலியாலும் சிறுவன் கதறி அழுதான் பெற்றோர் அவனை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இட்லி தட்டை அகற்றினால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, அங்கிருந்த வீரர்கள் போராடி இரும்பு கட்டரால், இட்லி தட்டை வெட்டி அகற்றி பத்திரமாக விரலை மீட்டனர். பின், முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை