உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கோலாகலம்

காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கோலாகலம்

வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, காமாட்சி அம்மன் கோவிலில் 20ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இன்றும், நாளையும் அம்மன் கிளி வாகனம், காமதேனு வாகனத்தில் வீதி உலா வருகிறார். வரும் 19ம் தேதி, பால்குடம் வீதி உலா நடக்கிறது.பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வரும் 21ம் தேதி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் வீதி உலா வருகிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.ஜெ.பி.கோவில் தெரு, சஞ்சீவிராயன் கோவில் தெரு, பாலு தெரு, தாண்டவராயன் கோவில் தெரு, கப்பல்போலு தெரு, ஜி.ஏ., சாலை வழியாக வந்து, தேர் கோவிலை வந்தடையும்.அதையொட்டி, வரும் 22ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ