பட்டா மாற்ற லஞ்சம் வி.ஏ.ஓ., கைது
செய்யூர், செங்கல்பட்டு, தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி, 50. இவர் தன் நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் செய்தார்.நீண்ட நாட்களாக விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தப்பட்டிருந்ததால், புகழேந்தி, தண்டரை கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், 40, என்பவரிடம் விசாரித்தார். அப்போது, 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.இதையடுத்து புகழேந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, 7,000 ரூபாயை, நேற்று காலை சுதாகரின் நண்பர் பழனி, 58, என்பவரிடம் கொடுத்தார். அங்கிருந்த போலீசார், அவரை கைது செய்தனர். பின், வி.ஏ.ஓ., சுதாகரையும் கைது செய்தனர்.