உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயின்டரை கொன்ற சகோதரர்கள் சரண்

பெயின்டரை கொன்ற சகோதரர்கள் சரண்

அண்ணா நகர், அண்ணா நகர், எம்.ஜி.ஆர்., காலனியைச் சேர்ந்தவர் துரைசாமி, 32; பெயின்டர். இரண்டு நாட்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் அமர்ந்து, துரைசாமி மது அருந்தி உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தினேஷ் மற்றும் அவரது சகோதரர் நரேஷ் ஆகியோர், துரைசாமியை பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். இதில் துரைசாமி இறந்தார். அண்ணா நகர் போலீசார், துரைசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தலைமறைவாக இருந்த சகோதரர்களை தேடிவந்தனர்.இந்த நிலையில், தினேஷ் மற்றும் நரேஷ், சென்னை எழும்பூர் ஐந்தாவது நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரணடைந்தனர். இருவரையும் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை