உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புல்லட் திருடன் சிக்கினான்

புல்லட் திருடன் சிக்கினான்

பெரவள்ளூர், கொளத்துார், பெரியார் நகர் நான்காவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன், 42; சென்னை தலைமைச் செயலக அலுவலர்.கடந்த 17ம் தேதி, தன் வீட்டருகே அவரது 'புல்லட்' இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, புல்லட் காணாமல் போயிருந்தது.இது குறித்து, சந்தானகிருஷ்ணன், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விசாரித்த போலீசார், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற, துாத்துக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம், 40, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து, வாகனத்தை மீட்டனர். ராமலிங்கம் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ