உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை ஒன் செயலியில் பஸ் பாஸ் சலுகை

 சென்னை ஒன் செயலியில் பஸ் பாஸ் சலுகை

சென்னை: தனியார் கல்லுாரி மாணவர்கள் பெறும், 50 சதவீத கட்டண சலுகை பஸ் பாஸும், 'சென்னை ஒன்' செயலி மூலம் பெறும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. சென்னை புறநகரில், மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகர பஸ், ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக 'சென்னை ஒன்' செயலி, கடந்த செப்., 22ம் தேதி அரசு துவக்கி வைத்தது. ஒரே செயலியில் அனைத்து பொது போக்குவரத்து பயணத் துக்கான டிக்கெட் பெறும் வசதி இருப்பதால், பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையே, இந்த செயலி வாயிலாக, மாதாந்திர பஸ் பாஸ் பெறும் வசதி, கடந்த மாதம் 27ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை புறநகரில் உள்ள கல்லுாரிகளில் பல ஆயிரகணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு, தற்போது 50 சதவீத சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாஸும், 'சென்னை ஒன்' செயலி மூலம் கிடைப்பதற்கான பணிகளை தற்போது துவக்கி உள்ளோம். அடுத்த சில மாதங்களில் இந்த வசதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை