உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிலதிபர் தவறவிட்ட 68 சவரன் நகை மீட்பு

தொழிலதிபர் தவறவிட்ட 68 சவரன் நகை மீட்பு

சென்னை, புரசைவாக்கம், மூக்காத்தால் தெருவைச் சேர்ந்தவர் பழனியப்பன், 80; தோல் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார்.சில நாட்களுக்கு முன், திருச்சியில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்று, நேற்று காலை ரயிலில், எழும்பூர் வந்து இறங்கினார். அங்கிருந்து வீட்டிற்கு, ஆட்டோவில் சென்றார். 68 சவரன் நகை, வைர பிரேஸ்லெட் அடங்கிய கை பையை ஆட்டோவில் மறதியாக விட்டுவிட்டார்.இதுகுறித்து தொழிலபதிபர் பழனியப்பன், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஆட்டோ எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில், அரக்கோணத்தைச் சேர்ந்த பொன்னுரங்கம் என்பவரது ஆட்டோவில் தொழிலபதிபர் நகையை தவறவிட்டது தெரியவந்தது. அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், ஓட்டுநரிடம் இருந்த நகையை மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை