உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நடந்தது.ஆண்டுதோறும் பிப்., 4ம் தேதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், 'உலக புற்றுநோய் தினம்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி, மருத்துமவனை முதல்வர் தேரணிராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் கோபு, புற்றுநோய் மருத்துவ துறை தலைவர் கண்ணன், கதிர்வீச்சு துறை தலைவர் விஜயஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து, மருத்துவ மாணவர்கள் நாடகம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ