உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.4 கோடி மதிப்பு கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்

ரூ.4 கோடி மதிப்பு கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்

சென்னை, சென்னை விமான நிலையத்தில், நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மலேஷியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 'மலேஷியன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று காலை 10:45 மணிக்கு தரையிறங்கியது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து, அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று திரும்பியது தெரியவந்தது. அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முரண்பாடாக பதிலளிக்கவே, உடைமையை சோதனை செய்தனர். இதில், 4 கிலோ 'ஹைட்ரோ போனிக்' வகை உயர்ரக கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு நான்கு கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியை கைது செய்தனர். கஞ்சாவை விமான நிலையத்திற்கு வெளியே வாங்கி செல்வதற்காக ஒருவர் காத்திருந்ததும் தெரியவந்தது. கடத்தல் பயணி மாட்டிக்கொண்டதை அறிந்த அந்த நபர், உஷாராக தப்பி ஓடிவிட்டார். அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை