உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.4 லட்சம் மதிப்பு கஞ்சா ரயில் நிலையத்தில் பறிமுதல்

ரூ.4 லட்சம் மதிப்பு கஞ்சா ரயில் நிலையத்தில் பறிமுதல்

சென்னை:சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், நேற்று சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து வரும் 'சர்க்கார் எக்ஸ்பிரஸ்' ரயில், ஒன்பதாவது நடைமேடையில் வந்தது. அந்த ரயிலின் பின்பக்கத்தில் உள்ள பொது பயணியருக்கான பெட்டியில் சோதனை செய்தபோது, யாரும் உரிமை கோரப்படாத பச்சை நிற பை காணப்பட்டது. பையை திறந்து பார்த்தபோது, நான்கு பண்டல்கள் இருந்தன. அவற்றில் 8 கிலோ எடையிலான கஞ்சா இருந்தது. அதன் மதிப்பு, 4 லட்சம் ரூபாய்.போலீசாரின் சோதனைக்கு பயந்து, அதை கடத்தி வந்த நபர்கள் வீசி சென்றிருக்கலாம். எனவே அதன் அடிப்படையில் விசாரணை நடப்பதாக, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை