உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊர்க்காவல் படையினருக்கு இனி கேன்டீன் வசதி

ஊர்க்காவல் படையினருக்கு இனி கேன்டீன் வசதி

சென்னை, சென்னை காவல் துறையில் உள்ள 2,256 ஊர்க்காவல் படை வீரர்கள், 104 காவல் நிலையங்கள், 56 போக்குவரத்து காவல் நிலையங்களில், சட்டம் - ஒழுங்கு பணிகளில் காவல் துறையினருடன் இணைந்து, பணியாற்றி வருகின்றனர்.காவல் துறை மானிய கோரிக்கையில், தமிழக முதல்வர் காவலர் பல்பொருள் அங்காடி வசதியை, ஊர்க்காவல் படையினருக்கும் விரிவுப்படுத்தப்படும் என, அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.அதன்படி, கடந்தாண்டு, ஆக., 28ம் தேதி அரசாணை எண்: 452 தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அரசாணையை செயல்படுத்தும் விதமாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று கமிஷனர் அருண் திட்டத்தை துவக்கி வைத்து, அங்காடி அடையாள அட்டையை ஊர்க்காவல் படையினருக்கு வழங்கினார்.ஒவ்வொரு ஊர்க்காவல் படையினரும், மாதம், 15,000க்கு மளிகை பொருட்களும், ஆண்டுக்கு, 1.50 லட்சம் ரூபாய்க்கு மின்சாதன வீட்டு உபயோகப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு ள்ளது.இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரட்கர், துணை கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயங்கரன், அன்வர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ