உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிக்னலில் தீப்பற்றி எரிந்த கார்

சிக்னலில் தீப்பற்றி எரிந்த கார்

பள்ளிக்கரணை: நீலாங்கரை, ராஜேந்திர நகர், 11வது தெருவைச் சேர்ந்த பிராங்க்ளின், 28.இவர், மகேந்திரா எக்ஸ்.யு.வி., 500 காரில், துரைப்பாக்கம்- - பல்லாவரம் ரேடியல் சாலையில், பரங்கிமலை நோக்கி குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார். பிரபல தனியார் மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் நின்றபோது, காரின் முன்பக்க இன்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது.இதை கவனித்த போக்குவரத்து போலீசார் எச்சரித்ததும், காரில் இருந்த ஐந்து பேரும் உடனடியாக இறங்கினர். பின், போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு, தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை