உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு கார் மெக்கானிக் பலி

ரயிலில் அடிபட்டு கார் மெக்கானிக் பலி

பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், மளங்கானந்தபுரத்தைச் சேர்ந்தவர் யேசு, 54; கார் மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் மாலை, குரோம்பேட்டை - பல்லாவரம் இடையே, கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியது. இதில், படுகாயமடைந்த யேசு, சம்பவ இடத்திலேயே இறந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். காரை திருடி விற்றதாக, கோட்டூர்புரம் போலீசாரால் யேசு, கடந்தாண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை