உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேரம், செஸ் போட்டி கவுன்சிலர்கள் அசத்தல்

கேரம், செஸ் போட்டி கவுன்சிலர்கள் அசத்தல்

சென்னை, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டிகளில், 74 கவுன்சிலர்கள் உட்பட, 2,416 பேர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.செஸ் போட்டிகள் நேற்று காலை, நேரு விளையாட்டு அரங்கில் நடந்தன. ஆண், பெண் பணியாளர்கள், கவுன்சிலர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தன.கவுன்சிலர்களுக்கான செஸ் போட்டியில், ஆண்களில் 151வது வார்டு சங்கர் கணேஷ் முதலிடம்; 99வது வார்டு பருதி இளம்சுருதி இரண்டாமிடம்; 72வது வார்டு சரவணன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்களில், 81வது வார்டு சாந்தகுமாரி முதலிடம், 167வது வார்டு துர்கா தேவி இரண்டாம் இடத்தை பிடித்தனர்.கேரம் போட்டிஆண் கவுன்சிலர்களுக்கான கேரம் போட்டியில், சரவணன் முதலிடம், சங்கர் கணேஷ் இரண்டாமிடம், பருதி இளம் சுருதி மூன்றாமிடம்; பெண் கவுன்சிலர்களுக்கான கேரம் போட்டியில், 167 வது வார்டு கவுன்சிலர் துர்காதேவி முதலிடம், 81வது வார்டு கவுன்சிலர் சாந்தகுமாரி இரண்டாமிடமும் பெற்றனர்.கேரம், கலப்பு இரட்டையர் பிரிவில், கவுன்சிலர்கள் சரவணன், சாந்தகுமாரி முதலிடம்; பருதி இளம் சுருதி, துர்காதேவி இரண்டாமிடம் பெற்றனர். ஓப்பனர் இரட்டையர் பிரிவில், கவுன்சிலர்கள் சரவணன், பருதி இளம்சுருதி முதலிடம்; சாந்தகுமாரி, துர்காதேவி இரண்டாமிடம் பெற்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை