உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீஸ்காரரை மிரட்டியதாக பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு

போலீஸ்காரரை மிரட்டியதாக பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு

பெரம்பூர், பெரம்பூரில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, போலீசாரை மிரட்டியதாக பா.ஜ., பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவுது:பெரம்பூர் அகரம் சந்திப்பில், தமிழக பா.ஜ., சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் கணேஷ்குமார், 31, கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தார்.அப்போது, வெற்றி நகரைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ரவிச்சந்திரன்,50, என்பவர், இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகள் பேசினார். இதை தட்டிக் கேட்ட இன்ஸ்பெக்டரையும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.,வைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மீது, செம்பியம் காவல் நிலையத்தில் கணேஷ்குமார் புகார் அளித்தார்.இதன்படி, ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை