உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமனார் மீது பொய்யாக போக்சோ புகார் அளித்த மருமகள் மீது வழக்கு

மாமனார் மீது பொய்யாக போக்சோ புகார் அளித்த மருமகள் மீது வழக்கு

சென்னை, தன் குழந்தையை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் அளித்த மருமகள் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில், இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரில், 'தன் குழந்தையை, மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். புகார் அளித்த இளம்பெண்ணின் கணவர் எம்.இ., படித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதை, அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால், தந்தையை பழிவாங்க நினைத்த மகன், மனைவி வழியாக பாலியல் வன்கொடுமை என, பொய் புகார் அளிக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, உண்மைக்கு புறம்பாக புகார் அளித்த இளம்பெண் மீது, போலீசார் வழக்கு பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி, பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு - 22 (1)ன் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை