உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிலாளியை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய ராணுவ வீரர் மீது வழக்கு

வளசரவாக்கம்:புது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியை தாக்கிய, ராணுவ வீரர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குன்றத்துார், அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் செல்வதுரை, 38. இவர், வளசர வாக்கம் வேலன் நகர் ஏழாவது தெருவில், புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த வீட்டின் பின்புறம் வசிக்கும் ராணுவ வீரரான சீனிவாசன், 42, என்பவர், நேற்று முன்தினம் இரவு, பணி நடக்கும் வீட்டிற்கு சென்று, 'வேலை செய்வதால் சத்தம் அதிகமாக வருகிறது. என்னால் துாங்க முடியவில்லை' எனக்கூறி, செல்வதுரை மற்றும் பரணிபுத்துாரைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் கார்த்திக், 43, ஆகியோரிடம் தகராறு செய்தார். மேலும், அங்கு கிடந்த மண் வெட்டியை எடுத்து, செல்வதுரையை தாக்கினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து, சீனிவாசன் கையில் இருந்த மண்வெட்டியை பறித்து, அவரை தாக்கினர். இதுகுறித்து, இரு தரப்பினரும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், ராணுவ வீரர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை