மேலும் செய்திகள்
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது
30-Sep-2025
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, த.வெ.க., நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோருக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் நடந்தது. அப்போது அவரது பேச்சை கேட்க அலைமோதிய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக த.வெ.க.,வின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார் இருவரும், கரூர் சி.பி.ஐ., அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகும்படி, சி.பி.ஐ., சார்பில் நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
30-Sep-2025