மேலும் செய்திகள்
ரோட்டில் சிமென்ட் கலவை; சுத்தம் செய்த போலீசார்
17-Apr-2025
சென்னை,நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலையில், நேற்று காலை 6:00 மணிக்கு, மெட்ரோ ரயில் பணிக்காக, சிமென்ட் கலவை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. வானிலை ஆய்வு மைய அலுவலகம் அருகே சென்றபோது, திடீரென லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.உடனே, ஓட்டுநர் லாரியை விட்டு விட்டு தப்பிச் சென்றார். இதனால், கல்லுாரி சாலை வழியாக எழும்பூர், ஜெமினி சென்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சம்பவம் அறிந்து வந்த போக்குவரத்து உதவி கமிஷனர் கஜேந்திரன், வாகன போக்குவரத்தை ஒரு புறம் அனுமதித்தார்.மேலும், கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்துவதற்காக, இரண்டு ராட்சத கிரேன் வாகனங்களை வரவழைத்தார். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின், கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டது.போக்குவரத்து போலீசார், லாரி ஓட்டுநரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் ஷா, 35, வை தேடி வருகின்றனர்.
17-Apr-2025