உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ ரயில் சேவையில் வரும் 15 முதல் மாற்றம்

மெட்ரோ ரயில் சேவையில் வரும் 15 முதல் மாற்றம்

சென்னை, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மேலே நடந்து வரும் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணி காரணமாக, பச்சை வழித்தடத்தில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, வரும் 15 முதல் 19ம் தேதி வரை தற்காலிகமாக மாற்றி அமைக்கப்படுகிறது. காலை 5:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, பரங்கிமலை - அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை 14 நிமிடங்கள்; விமான நிலையம் முதல் அசோக் நகர் வரை 14 நிமிட இடைவெளி; சென்ட்ரல் - கோயம்பேடு இடையே ஏழு நிமிட இடைவெளியில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். கோயம்பேடு முதல் அசோக் நகர் வரை, மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். இந்த நேரத்தில் பயணியர் வசதிக்காக, கோயம்பேடு மற்றும் அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலைய பகுதிகளில் காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். காலை 6:00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும். விம்கோ நகர் - சென்ட்ரல் - விமான நிலையம் தடத்தில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை