உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஆர்.கே., நகரில் திறப்பு

சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஆர்.கே., நகரில் திறப்பு

ஆர்.கே.நகர், ஆர்.கே.நகர் பகுதியில் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆனால், இப்பகுதியில் ஒரு வங்கி சேவையும் இல்லை. இதனால் அப்பகுதிவாசிகள் வண்ணாரப்பேட்டை, பிராட்வே சென்று வங்கி சேவையை பெற்று வருகின்றனர்.இப்பகுதியில் வங்கி திறக்க வேண்டும் என, 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்நிலையில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களின் சேவைக்கு வங்கி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., எபினேசர் தெரிவித்தார்.இதையடுத்து, கொருக்குப்பேட்டை, எண்ணுார் நெடுஞ்சாலையில், 'சென்னை மத்திய கூட்டுறவு வங்கி'யின் கிளை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.இதில், சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் இந்துமதி, எம்.எல்.ஏ., எபினேசர், தண்டையார்பேட்டை மண்டலக் குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதுகுறித்து எம்.எல்.ஏ., எபினேசர் கூறுகையில், ''கடந்த சட்டசபை தேர்தலில், நான் வெற்றி பெற்றால் வங்கி ஏற்படுத்தி தருவேன் என வாக்குறுதி அளித்தேன். ''அந்த வகையில், வங்கி அமைத்து தர, தொடர்ந்து சட்டசபையில் கோரிக்கை எழுப்பினேன். துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தேன். பல கட்ட நடவடிக்கைக்கு பின், சென்னை மத்திய கூட்டுறவு வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.வங்கியின் நிர்வாக இயக்குநர் இந்துமதி கூறுகையில், ''வங்கியில் நகைக்கடன், மகளிர் சுய உதவி கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்கள் வழங்கப்படும். ''மாதந்தோறும் தவறாமல் தவணை செலுத்தினால், மீதமுள்ள அசல் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும். வாடிக்கையாளர்களுக்கான புதிய கணக்குகள் திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு, 'லோன் மேளா' மூலம் வங்கி கடன்களும் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை