| ADDED : நவ 19, 2025 04:19 AM
சென்னை: திருநின்றவூர் ரயில் பணிமனை மேம்பாட்டு பணி, வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. இதனால், சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: 23ல் மாற்றம் கர்நாடகா மாநிலம், கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் லால்பாக், கோவை - சென்ட்ரல் இன்டர்சிட்டி, கர்நாடகா மாநிலம் அசோகபுரம் - சென்ட்ரல் விரைவு ரயில்கள் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் திருப்பதி - சென்ட்ரல் விரைவு ரயில் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும் சென்ட்ரல் - அசோகபுரம், சென்ட்ரல் - கோவை இன்டர்சிட்டி, சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு லால்பாக் விரைவு ரயில்கள் காட்பாட்டியில் இருந்து இயக்கப்படும் சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும் செ ன்ட்ரல் - மும்பை சி.எஸ்.டி., ரயில் மதியம் 1:15 மணிக்கு பதிலாக ஒரு மணிநேரம் தாமதமாக இயக்கப்படும் சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மங்களூரு ரயில் மதியம் 1:25 மணிக்கு பதிலாக ஒரு மணிநேரம் தாமதமாக இயக்கப்படும் சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் 2:15 மணிக்கு பதிலாக ஒரு மணிநேரம் தாமதமாக இயக்கப்படும் அரக்கோணம் - பீஹார் மாநிலம் பாட்னா விரைவு ரயில் மூன்று மணிநேரம் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும் 22ல் மாற்றம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் - சென்ட்ரல் காலை 9:40 மணி ரயில், வரும் 22ல் இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றடையும் மங்களூரு சென்ட்ரல் - சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் ரயில் வரும் 22ல் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் மும்பை லோக்மானிய திலக் - சென்ட்ரல் வரும் 22ல் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.