உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

சென்னை : ''தமிழகத்தில், சமச்சீர் கல்வி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி கூறினார். சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, பா.ம.க., சார்பில் தமிழகம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, கண்டன ஆர்ப்பட்டத்தை துவக்கி வைத்து பா.ம.க., தலைவர் மணி பேசும் போது, ''தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாததால், தவித்து வருகின்றனர். காலதாமதம் தொடர்ந்தால், பாடங்களை முழுவதுமாக நடத்துவது சிரமம் என ஆசிரியர்கள் கூறுகின்றனர். ''சமச்சீர் கல்வியை தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும் என மாணவர்களின் பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர். இவைகளை அரசு கண்டுகொõள்ளாமல் உள்ளது. கல்வித் துறை செயல் இழந்து விட்டது. எல்லாருக்கும் தரமான, சீரான கல்வி கிடைக்க, சமச்சீர் கல்வி அவசியம். சமச்சீர் கல்வியை உடனடியாக செயல்படுத்த வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ