உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏர்போர்ட்டில் மண் அள்ளும் இயந்திரம் ஏறி வாலிபர் பலி

ஏர்போர்ட்டில் மண் அள்ளும் இயந்திரம் ஏறி வாலிபர் பலி

திரிசூலம் : சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்த, மண் அள்ளும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி, வாலிபர் ஒருவர் இறந்து போனார். சென்னை விமான நிலையத்தில், விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, பன்னாட்டு புறப்பாடு முனையத்தின் அருகே, ஒரு ஜே.சி.பி., இயந்திரம் மண் அள்ளிக் கொண்டிருந்தது. இந்த இயந்திரத்தில், டிரைவரின் உதவியாளராக, கும்பகோணத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் சீத்தாராமன்,19, என்பவர் இருந்தார். இயந்திரம் பள்ளம் எடுத்துக் கொண்டிருந்த போது, அதில் அமர்ந்திருந்த சீத்தாராமன் தவறி கீழே விழுந்தார். அப்போது, ஜே.சி.பி., இயந்திரத்தின் சக்கரம், சீத்தாராமனின் தலை மீது ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் தலை நசுங்கி இறந்தார். டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விமான நிலைய போலீசார், சீத்தாராமனின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்திற்கு காரணமான டிரைவர் தேடப்பட்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ