உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓபன் சிலம்பம் போட்டி சென்னை சிறுமி முதலிடம்

ஓபன் சிலம்பம் போட்டி சென்னை சிறுமி முதலிடம்

சென்னை, காங்கையன் சிலம்பம் கலைக்கூடம் சார்பில், ஓபன் சிலம்பம் போட்டி, ஐ.சி.எப்., பள்ளி வளாகத்தில் நடந்தது.போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.இதில், பல்வேறு வயது பிரிவுகளில், ஒன்றை கொம்பு, இரட்டை கொம்பு, வேல் கொம்பு மற்றும் மான் கொம்பு ஆகிய வகைகளில் போட்டிகள் நடந்தன.போட்டியில், சென்னை கீழ்ப்பாக்கம், ராஜாஜி பவன்ஸ் பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவி பனிமுகில், 7, ஒற்றை கொம்பு பிரிவில் முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றார்.இவர், பல்வேறு மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்று அசத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை