உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை - இலங்கை விமானம் திடீர் ரத்தால் பயணியர் அவதி

சென்னை - இலங்கை விமானம் திடீர் ரத்தால் பயணியர் அவதி

சென்னை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் அதிகாலை 2:00 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து, மீண்டும் அதிகாலை 3:00 மணிக்கு, தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு செல்லும்.சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய 130 பயணியர் காத்திருந்தனர்.ஆனால், நேற்று வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இலங்கையில் இருந்து சென்னைக்கு வரவில்லை. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் பயணிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தகவல் கிடைக்காத 100க்கும் மேற்பட்ட பயணியர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நள்ளிரவில் வந்து காத்திருந்து, விமானம் ரத்து குறித்து அறிந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கவுன்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணியரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அமைதிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்