உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னை டென்னிஸ் தொடர்: நாளை மறுநாள் துவக்கம்

 சென்னை டென்னிஸ் தொடர்: நாளை மறுநாள் துவக்கம்

சென்னை: சென்னை மாவட்ட கிளப்புகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டி, வரும் 4ம் தேதி துவங்குகிறது. இதில், சென்னையின், 85 கிளப் அணிகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட கிளப்புகளுக்கு இடையிலான, 33வது டென்னிஸ் தொடர் போட்டி, சென்னையின் பல்வேறு மைதானங்களில், வரும் 4ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், சென்னையின் 85 கிளப் அணிகளை சேர்ந்த, 500க்கும் அதிகமான வீரர்கள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு போட்டி யிடுகின்றனர். போட்டிகள் '45+, 60+, ரெகுலர், வெட்ரன்' ஆகிய பிரிவுகளில் நடைபெறுகின்றன. மொத்தம், 8.50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் மண்டலத்தில் வெற்றி பெறும் வீரருக்கு, 1.28 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கே.எஸ்.நாராயணன் நினைவு ரோலிங் கோப்பையும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை