உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

துாய்மை பணியாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நீலாங்கரை:கண்ணகிநகரை சேர்ந்தவர் திவாகர், 40; மாநகராட்சி துாய்மை பணியாளர். இவர், 194வது வார்டுக்கு உட்பட்ட, இ.சி.ஆர்., - ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நேற்று, பேட்டரி வாகனத்தில், வீடு, கடைகளில் குப்பை சேகரித்து கொண்டிருந்தார். சாலையில் செல்லும்போது, திடீரென திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். ஊழியர்கள் வந்து சோதனை செய்தபோது, திவாகர் இறந்துவிட்டதை ?உறுதி செய்தனர். து தொடர்பாக, நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ