பெண்ணுக்கு காதல் தொல்லை கல்லுாரி காவலாளி கைது
அரும்பாக்கம், திருவேற்காட்டை சேர்ந்தவர் அருண்குமார், 36. இவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், காவலாளியாக பணிபுரிகிறார்.அதே கல்லுாரியில், பெரியமேட்டை சேர்ந்த, 47 வயது பெண், துாய்மை பணியாளராக பணிபுரிகிறார்.திருமணமான அப்பெண்ணிடம், தன்னை காதலிக்குமாறு, அருண்குமார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அப்பெண், நேற்று முன்தினம் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், பெண்ணுக்கு தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, அருண்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.