வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மயிலாப்பூர் பகுதியில் கார் பார்க்கிங் வசதியில்லாமல் பொது மக்கள் கஷ்ட படுகின்றனர். மந்தவெளி பேரூந்து நிலையம் இருந்த இடத்தில ஒரு மல்டி லெவல் பார்க்கிங் வசதி செய்து கொடுத்தாலே போதுமானது. ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் தேவையில்லை.
சென்னை: மந்தைவெளி பேருந்து நிலையத்தில், 167.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் அமைக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் - தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், மந்தைவெளி மாநகர போக்குவரத்து பணிமனையில் 167.08 கோடி ரூபாய் முதலீட்டில், ஒருங்கிணைந்த வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், 'பிரிட்ஜ் அண்டு ரூப்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்டு ரூப் நிறுவனத்தின் பொது மேலாளர் ரவி ஆகியோர், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மொத்தம் 29,385 சதுர மீட்டரில் அமையும் இந்த வணிக வளாகத்தில், 'கோபுரம் - ஏ' மற்றும் 'கோபுரம் - பி' என, இரண்டு கட்டடங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கட்டடமும் இரண்டு அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் ஏழு மேல் தளங்கள் என்ற அமைப்பில் கட்டப்படும். இங்கு பேருந்துகளில் பயணியர் ஏறி இறக்குவதற்கான வசதிகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக இடங்கள் ஆகியவை இடம்பெறும். இது பயணியரின் வசதியை மேம்படுத்தும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் கார் பார்க்கிங் வசதியில்லாமல் பொது மக்கள் கஷ்ட படுகின்றனர். மந்தவெளி பேரூந்து நிலையம் இருந்த இடத்தில ஒரு மல்டி லெவல் பார்க்கிங் வசதி செய்து கொடுத்தாலே போதுமானது. ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் தேவையில்லை.