மனுக்கள் மீது நடவடிக்கை கமிஷனர் அருண் உத்தரவு
சென்னை 'பொது மக்களிடம் பெற்ற, 15 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். போலீசார் மற்றும் பொது மக்களிடம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் அருண் நேரடியாக புகார் மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில், பொது மக்களிடம் நேற்று புகார் மனுக்கள் பெற்றார். அவ்வாறு பெற்ற, 15 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும், ். அது பற்றி தனக்கு அறிக்கை தாக்கல் செய்யும் படியும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். *