உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநங்கையருக்கு ஆவணங்கள் பெற குழு அமைப்பு

திருநங்கையருக்கு ஆவணங்கள் பெற குழு அமைப்பு

-சென்னை, சென்னை மற்றும் புறநகரில் வசதித்து வரும் திருநங்கையர் மற்றும் திருநம்பியரின் கவுரமான வாழ்வாதாரத்துக்காக, சகோதரன் எனும் அமைப்பு உதவி வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு வங்கி கணக்கு மற்றும் உரிய அரசு ஆவணங்கள் இல்லாமல் உள்ளனர். சகோதரன் அமைப்பின் முயற்சியால், இவர்களுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுத்தர, எச்.எஸ்.டி., எனும் தன்னார்வ நிறுவனம் உதவிக்கு முன்வந்துள்ளது.திருநங்கை மற்றும் திருநம்பியருக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு துவக்குதல் உள்ளிட்டவற்றுக்கும் உதவ, 80 பேர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை