உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.46 லட்சம் கையாடல் தியேட்டர் ஊழியர் மீது புகார்

ரூ.46 லட்சம் கையாடல் தியேட்டர் ஊழியர் மீது புகார்

பெரம்பூர்,சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 43. இவர், பெரம்பூரில் உள்ள பி.வி.ஆர்., சினிமாஸ் தியேட்டரில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், செம்பியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:பி.வி.ஆர்., சினிமாஸ் தியேட்டரில் கணக்காளராக டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த துர்கா, 37, என்பவர், கடந்த ஓராண்டாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பி.வி.ஆர்., சினிமாஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து, வசூல் கணக்கு கேட்ட போது, 46 லட்ச ரூபாய் கையிருப்பில் உள்ளதாகவும், அதை வங்கியில் செலுத்தி விட்டதாகவும் கூறினார். அதற்கு போலியான ஆவணங்களை கொடுத்தார். சந்தேகத்தின்படி, கணக்கை சரிபார்த்தபோது, 46 லட்ச ரூபாய் ஏமாற்றி உள்ளது தெரிந்தது. சம்பந்தப்பட்ட நபரை பிடித்து விசாரித்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.இது குறித்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை