உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி ஆபத்தான நிலையில் சிறுவர் ஊஞ்சல்

புகார் பெட்டி ஆபத்தான நிலையில் சிறுவர் ஊஞ்சல்

ஆபத்தான நிலையில் சிறுவர் ஊஞ்சல்

பெருங்குடி மண்டலம், ஜல்லடையன்பேட்டை ஜெயச்சந்திரன் நகர், முதல் பிரதான சாலையில், 275 மீட்டர் சுற்றளவு உள்ள பூங்கா, 2019, பிப்., 2ல் திறக்கப்பட்டது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்கின்றனர். இங்கு, சிறுவர்கள் பொழுது போக்கும் இடத்தில் உள்ள ஊஞ்சலில், ஒரு பக்க பிடிமான இணைப்பு, உடைந்து விழும் நிலையில் உள்ளது.ஆபத்தை அறியாமல், பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்த ஊஞ்சலில் அமர வைத்து, ஆட்டி மகிழ்கின்றனர். ஆனால், ஊஞ்சலின் பிடிமான இணைப்பு, எப்போது வேண்டுமானாலும் உடைந்து, பிள்ளைகள் விபத்திற்குள்ளாகலாம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா.சுமதி, 31, ஜல்லடையன்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை