மாணவர்களின் நலனில் அக்கறை
அறக்கட்டளை நிர்வாகத்திற்கு உட்பட்டஆறு கல்லுாரிகளிலும், 132 பேராசிரியர்கள் பணியிடங்கள், நீதிமன்றம் சார்பில் வெளிப்படை தன்மையோடு, ஊழற்ற முறையில் நிரப்பப்பட்டது. அறக்கட்டளை சொத்துக்கள் மீட்கப்பட்டு, அதன் வாயிலாக, வாடகையாக ஆண்டுக்கு, 6 கோடி ரூபாயாக மூன்றாண்டுகளில் உயர்ந்துள்ளது.கல்லுாரிக்கு பூஜ்ஜியம் வருகை பதிவேட்டில் உள்ள மாணவர்களே பேராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கல்லுாரிக்கு வரும், 95 சதவீத மாணவர்கள் வழக்கம் போல் வந்து செல்கின்றனர். மாணவர்களின் நலனில், நிர்வாகம் அக்கறையோடு செயலாற்றி வருகிறது.- துரைக்கண்ணு செயலர், பச்சையப்பன் அறக்கட்டளை