உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

கரூர், தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் ஜூலை, 2 முதல், 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது. பணியிட மாறுதல் கோரி 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2025 ஜூன், 30 நிலவரப்படி காலி பணியிடங்களை கல்வி மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.இதன்படி, கரூர் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) முருகேசன் தலைமையில், மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 32 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 18 பேர் கலந்தாய்வுக்கு வந்திருந்தனர். அவர்கள் யாரும் இடமாறுதல் பெறவில்லை. விண்ணப்பித்தவர்களில், 14 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை