உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சோழிங்கநல்லுார் ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலையை மூட மாநகராட்சி உத்தரவு

 சோழிங்கநல்லுார் ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலையை மூட மாநகராட்சி உத்தரவு

சென்னை: சோழிங்கநல்லுாரில் மழைநீர் வடிகால் பணிக்காக அனுமதி பெறாமல் இயங்கிய, 'ரெடி மிக்ஸ் கான்கிரீட்' ஆலையை மூட, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சோழிங்கநல்லுாரில் உள்ள ரெடி மிக்ஸ் கான் கிரீட் ஆலையால் ஏற்படும் துாசு, அதிக ஒலி மாசால் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கனகர வாகனங்கள் வந்து செல்வதால், சாலைகளும் சேதமடைந்தன. எனவே, ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஆலையை மூட உத்தரவிட வேண்டும் என, பசுமை தீர்ப்பாயத்தில் வைபிரன்ட் பெண்கள் நலச்சங்கம் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப் பாயம், 'இது குறித்து ஆய்வு செய்து, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி தீர்ப்பாயத்தில், சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கை: சோழிங்கநல்லுார் பகுதி யில் மழைநீர் வடிகால் பணிகளை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தேவையான ரெடி மிக்ஸ் கான்கிரீட் உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க இடம் தேவை என, ஒப்பந்த நிறுவனம் கோரியது. அதன் அடிப்படையில், சோழிங்கநல்லுாரில் வீட்டு வசதி வாரிய நிலம், 11 மாதங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி ஆய்வு செய்ததில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து, தடையில்லா சான்றிதழ் பெறாமல், ரெடி மிக்ஸ் கான்கிரீட் தயாரிக்கும் பணியை, தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. எனவே, ரெடி மிக்ஸ் கான்கிரீட் தயாரிப்பை நிறுத்துமாறு, தனியார் நிறுவனத்திற்கு, மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ