மேலும் செய்திகள்
எகிறியது ஆட்டிறைச்சி விலை கிலோ ரூ.1,200க்கு விற்பனை
4 hour(s) ago
காசிமேடு: புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கூட்டம் குவிந்ததால், மீன் விலை இருமடங்கு உயர்ந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா கூட்டம் போல், மீன் வாங்க மக்கள் கூடுவது வழக்கம். இன்று தீபாவளி என்பதால், கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற, 70க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று கரை திரும்பின. வாலை, முளியான், சங்கரா உள்ளிட்ட மீன் வகைகள் அதிகம் குவிந்தன. மேலும், புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், காசிமேட்டில் மீன்வாங்க குவிந்த மக்கள் கூட்டத்தால், மீன் விலை இரு மடங்கு உயர்ந்தது. இருந்தும் பொதுமக்கள் பேரம் பேசி, மீன் வகைகளை வாங்கி சென்றனர். தமிழகம் முழுதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ஜரூராக நடந்தது. அந்த வரிசையில், ஆடு - கோழி இறைச்சி விற்பனையும் களைகட்டியது. ஆட்டிறைச்சி ரூ.1,200 சென்னையில் சில இடங்களில், ஆட்டிறைச்சி கிலோ அதிகரித்து, 1,000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டு மண்ணீரல் வழக்கமாக, 150 - 170 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தவிர, முதல் தரம் கோழி இறைச்சி, 260 - 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி இன்று கொண்டாடப்பட்டாலும், அமாவசை தினம் என்பதால், நேற்றே, இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 1,100 - 1,300 கறுப்பு வவ்வால் 900 - 1,000 வெள்ளை வவ்வால் 1,000 - 1,200 ஐ வவ்வால் 1,400 - 1,500 பாறை 500 - 550 கடல் விரால் 500 - 550 சங்கரா 300 - 350 சீலா 400 - 500 தும்பிலி 100 - 150 கனாங்கத்தை 150 - 200 கடம்பா 300 - 350 நெத்திலி 200 - 250 முளியான் 150 - 200 வாலை 50 - 100 இறால் 400 - 550 டைகர் இறால் 1,000 - 1,200 நண்டு 200 - 300 வரி நண்டு 500 - 600
4 hour(s) ago