மேலும் செய்திகள்
கடைக்காரரிடம் பணம் பறித்தவர் பிடிபட்டார்
09-Jul-2025
சென்னை, சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 48. இவர், அங்குள்ள 'கூல்பார்' ஒன்றில் பணிபுரிகிறார்.கடந்த 9ம் தேதி இரவு டாக்டர் நடேசன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, ஆட்டோவில் வந்த நபர், அவரை தாக்கி, கத்தி முனையில், 2,000 ரூபாயை பறித்து தப்பிச் சென்றார்.ஐஸ்ஹவுஸ் போலீசாரின் விசாரணையில், கடலுார்மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 28, என்பது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரேம்குமார் மீது, ஏற்கனவே 3 குற்ற வழக்குகள் உள்ளன.
09-Jul-2025