மேலும் செய்திகள்
காவிரியாற்றில் மூழ்கி கூலி தொழிலாளி சாவு
24-Sep-2024
தி.நகர்:நவராத்திரி மற்றும் தொடர் பண்டிகையையொட்டி, தி.நகர் ரங்கநாதன் தெருவில் நேற்று, மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாடு முழுதும், நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.அத்துடன் இன்னும், 18 நாட்களில், தீபாவளி பண்டிகை வர உள்ளது. இதற்காக, பொதுமக்கள் புத்தாடை மற்றும் தேவையான பொருட்கள் வங்க துவங்கி உள்ளனர். இந்நிலையில், நேற்று வார விடுமுறை என்பதால், சென்னையின் வர்த்தக மையமான தி.நகரில் உள்ள வணிக வளாகங்கள், சிறிய கடைகள் என அனைத்திலும், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.குறிப்பாக, தி.நகர் ரங்கநாதன் தெருவிலும் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது. அத்துடன், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரங்கநாதன் தெருவில் வரும் மக்கள் கூட்டணத்தை கண்காணிக்க, காவல் துறை சார்பில் உயர் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
24-Sep-2024