உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டார்லிங் பிரமாண்ட 4 ஷோரூம்கள் திறப்பு

டார்லிங் பிரமாண்ட 4 ஷோரூம்கள் திறப்பு

சென்னை, தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வரும் 'டார்லிங்' நிறுவனம், காட்டுப்பாக்கம், குன்றத்துார், மாதவரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் புது பிரமாண்ட கிளைகளை நேற்று திறந்துள்ளது.பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கிளையை, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரும், 'டார்லிங்' நிறுவன நிர்வாக இயக்குனருமான வெங்கடசுப்பு தலைமையில், சிறப்பு விருந்தினரான 'ஹையர் அப்லையன்ஸ்' நிறுவன தலைவர் என்.எஸ்.சதீஷ் திறந்து வைத்தார்.மேலும், சமையலறை உபகரணங்கள் விற்பனை பிரிவை, 'வெர்சுனி இந்தியா ஹோம் சொல்யூஷன்ஸ்' நிறுவன நிர்வாக இயக்குனர் குல்பஹர் தவுராணியும், பர்னிச்சர் பிரிவைச் 'சவீதா' பல்கலை துணைவேந்தர் எஸ்.சுரேஷ்குமாரும் திறந்து வைத்தனர்.

குன்றத்துார்

குன்றத்துார் கிளையை, 'டார்லிங்' நிறுவன நிர்வாக இயக்குனரான வெங்கடசுப்பு தலைமையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். குன்றத்துார் நகராட்சி தலைவர் கோ.சத்தியமூர்த்தி, குன்றத்துார் நகராட்சி கமிஷனர் கவின்மொழி, விகார்டு இண்டஸ்டிரிஸ் நிறுவன துணை தலைவர் ஆர்.பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.

மாதவரம்

மாதவரம், பஜார் தெரு ஷோரூமை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் துவங்கி வைத்தார். 'பேனசோனிக் லைப் சொல்யூஷன் இந்தியா' தெற்கு இந்தியா மண்டல தலைவர் ரிச்சர்ட் டேனியல் ராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சூர்யா கலா, டார்லிங் குழும இயக்குனர் ஜேம்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் அமைந்துள்ள ஷோரூமை, 'டார்லிங்' குழும இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், அஜித்குமார் ஆகியோர் தலைமையில், 'லாயிட்ஸ் ஹேவல்ஸ் இந்தியா' நிறுவன முதன்மை பொது மேலாளர் ஹரி திறந்து வைத்தார்.கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ், பவர்லால் ஜுவல்லரி உரிமையாளர் அசோக் சந்த், தொழிலதிபர்கள் பழனி, ஆறுமுகம் உட்பட பலர் முன்னிலை வகித்து குத்து விளக்கு ஏற்றினர்.

சுலப தவணை வசதி

டார்லிங் நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடசுப்பு கூறியதாவது:வரும் காலத்தில், சென்னையில் மட்டும் 40 ஷோரூம் திறக்க திட்டமிட்டுள்ளோம். எங்களிடம் 2,500 முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான மொபைல் போன்களும், 6,000முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான 'டிவி'களும் விற்பனைக்கு உள்ளன. கல்யாணம் முதல் வீட்டு கிரகபிரவேசம் வரை தேவையான, அனைத்து பொருட்களும் எங்களிடம் ஒரே இடத்தில் கிடைக்கும். சுலப தவணை முறையில், விலை உயர்ந்த அனைத்து பொருட்களை எங்களிடம் எளிதாக வாங்கிச் செல்லாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை