உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்

இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்

எண்ணுார், சென்னை, எர்ணாவூர்குப்பம் கடற்கரையில் நேற்று காலை, இறந்த நிலையில் மூன்று ராட்சத ஆமைகள் கரை ஒதுங்கின. இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: குறிப்பிட்ட கால இடைவெளியில் இனப்பெருக்கத்திற்காக ஆமைகள் கடற்கரைக்கு வரும். அப்போது, துாண்டில் வளைவுகளில் மோதி ஆமைகள் உயிரிழக்க நேரிடுகிறது. குறிப்பாக, ஜன., - பிப்., மாதங்களில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு மீனவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ