ஐ.டி.ஐ.,நிரந்தர கட்டடம் கட்ட முடிவு
திருவொற்றியூர், குமரன் நகரில் வாடகை கட்டடத்தில் இயங்கும் ஐ.டி.ஐ.,யில் 162 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையம் அருகே, ரீட் கூட்டுறவிற்கு சொந்தமான, 1.25 ஏக்கர் நிலத்தில், வடசென்னை வளர்ச்சி சிறப்பு நிதியின் கீழ், 6.18 கோடி செலவில், ஐ.டி.ஐ.,நிரந்தர கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று காலை நடந்தது.