உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 48 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா ஆறு மாதங்களுக்குள் பொருத்த முடிவு

48 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா ஆறு மாதங்களுக்குள் பொருத்த முடிவு

சென்னை, சென்னை சென்ட்ரல், கொருக்குப்பேட்டை உட்பட 48 ரயில் நிலையங்களில் ஆறு மாதங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி முடியும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.தெற்கு ரயில்வேயில், சென்னை உட்பட அனைத்து ரயில் கோட்டங்களில் முக்கிய ரயில் நிலையங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த பணிகள் மெத்தமாக நடப்பதால், ரயில் நிலையங்களில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பயணியர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை தெற்கு ரயில்வே வேகப்படுத்தி உள்ளது. அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்தில், 48 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணி துவங்கி உள்ளது.இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிதுரிதப்படுத்தப்பட்டு உள்ளது.சென்னை சென்ட்ரல் -- கூடூர் மார்க்கத்தில் ராயபுரம் முதல் கும்மிடிப்பூண்டி வரை 17 நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும். சென்னை - ஜோலார்பேட்டை மற்றும் அரக்கோணம் -- ரேணிகுண்டா ஆகிய மார்க்கங்களில் உள்ள 31 நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.இந்த பணியையும் வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க உள்ளோம். ஒவ்வொரு நிலையத்திலும் 10 முதல் 25 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை